Categories
உலக செய்திகள்

கொரோனாவா…? ஓமிக்ரானா…? திக்குமுக்காடிய போரிஸ் ஜான்சன்…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 78,610 பேரை உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதித்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து தற்போது வரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 78,610 பேரை பாதித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்த கொரோனா பெருந்தொற்றை எவ்வாறு தடுப்பது என்பதை அறியாமல் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தவித்து வருகிறார்.

இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 78,610 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்தமாக அந்நாட்டில் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 10 லட்சத்தை கடந்துள்ளது.

இந்த கொரோனா ஒருபக்கமிருக்க தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரானால் இங்கிலாந்தில் தற்போது வரை 3,000 த்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Categories

Tech |