Categories
மாநில செய்திகள்

இந்த இரண்டு நாட்கள்…. பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை…. அதிரடி அறிவிப்பு…!!!!

கடந்த 1 வருடமாக தமிழகத்தில் கொரோனா காரணமாக வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாகக் குறைந்ததால் தளர்வுகள் வழங்கப்பட்டு கோவில்களும் திறக்கப்பட்டன. இதற்கிடையில் ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக திருவண்ணாமலையில் டிசம்பர் 18, 19ஆம் தேதி பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |