தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி தாம்பரம் பகுதியில், பல்லாவரம் டானரி தெரு, கிரிபித் தெரு 1 முதல் 4 மற்றும் மெயின் ரோடு, சோமசுந்தரம் 1 மற்றும் 2-ம் தெரு, முனிவர் அவென்யூ, பெரும்பாக்கம் நுக்கம்பாளையம் மெயின் ரோடு, கோகுல் நகர், ராமையா நகர், சேகரன் நகர், ராதா என்க்லேவ் ஆகிய பகுதிகளில் மாலை 4 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.