Categories
அரசியல்

“மாதம் ரூ.210 முதலீடு போதும்…. ரூ.60,000 பென்சன் கிடைக்கும்”…. சிறந்த நம்பிக்கையான திட்டம்….!!!

அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் கீழ் வாழ்நாள் முழுவதும் பென்சன் வாங்குவது எப்படி என்று பார்க்கலாம்

மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் ஒன்று தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா (Atal pension Yojana – APY).  2015 ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முதலீடுகளை பி.எஃப்.ஆர்.டி.ஏ. என்ற பென்ஷன் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது. அனைத்து வங்கி மற்றும் தபால் நிலையங்கள் மூலம் இத்திட்டத்தில் சேரலாம். அடல் பென்சன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 11 சதவீதம் கூடுதல் ரிட்டன் லாபம் கிடைத்துள்ளது. 18 முதல் 40 வயது வரையிலான எந்தவொரு இந்திய குடிமகனும் ஒரு கணக்கைத் திறக்கலாம். இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்துள்ள வங்கி கிளை அல்லது தபால் நிலையத்திலிருந்து ஒரு கணக்கைத் திறக்க முடியும்.

மாதாந்திர பங்களிப்புத் தொகை

இந்திய குடிமக்களில் 18 முதல் 40 வயது வரையிலானவர்கள் அனைவரும் இதில் முதலீடு செய்யலாம். மாதம் 42 ரூபாய் முதலீடு செய்தால் பிற்காலத்தில் மாதம் ரூ.1000 பென்சன் கிடைக்கும். 84 ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ.2000 பென்சன், 126 ரூபாய் முதலீடு செய்தால் 3000 ரூபாய் பென்சன் கிடைக்கும். மாதம் 168 ரூபாய் முதலீடு செய்தால் 4000 ரூபாய் பென்சன், 210 ரூபாய் முதலீடு செய்தால் 5000 ரூபாய் பென்சன் கிடைக்கும். இதன்படி, மாதம் 5,000 ரூபாய் அல்லது ஆண்டுக்கு 60,000 ரூபாய் பென்சன் கிடைக்க வேண்டுமெனில் தினம் 7 ரூபாய் சேமித்து முதலீடு செய்தால் போதும். அதாவது மாதம் 210 ரூபாய் முதலீடு செய்தால் 5,000 ரூபாய் பென்சன் கிடைக்கும்.

முதலில் மாதாந்திர பங்களிப்புத் தொகை செலுத்திய நாள் எதுவோ அதே நாளில் மாதம் தோறும் தானாகவே சேமிப்புக் கணக்கிலிருந்துதா மாதாந்திர பங்களிப்புத் தொகை கழித்துக்கொள்ளப்படும். உதாரணத்துக்கு 5ஆம் தேதி முதல் முறை பங்களிப்புத் தொகையை செலுத்தியிருந்தால், ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதி அந்தத் தொகை தானாகவே கழித்துக்கொள்ளப்படும்.

கணக்கிலிருந்து தானாகவே கழித்துக்கொள்ளும் வசதியை விரும்பாதவர்கள் தவிர்க்கலாம். ஆனால், மாதம் தோறும் தாங்களே பணத்தைச் செலுத்த வேண்டும். தவறினால் அபராதத்துடன் செலுத்த வேண்டியிருக்கும். உண்மையில் அரசின் இந்த திட்டமானது 60 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் தேவையான ஒன்று தான். எனவே உடனே கணக்கை தொடங்குங்கள் மாதந்தோறும் 5 ஆயிரம் பென்சன் தொகையை பெறவும்.

Categories

Tech |