Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி ….. பாகிஸ்தான் VS வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு….!!!

பாகிஸ்தான் -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான ஒருநாள் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கடந்த 13-ம் தேதி நடைபெற்றது .அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூன்று வீரர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மேலும் 3 வீரர்கள் உட்பட 5 பேருக்கு நேற்று கொரோனா தொற்று பாதிப்பு  இருப்பது உறுதியாகியது .

இதனால் மீதமுள்ள 15 வீரர்கள் மற்றும் 6 உதவியாளர்கள் ஆகியோருக்கு ஆர்டி பிசிஆர்  பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகு கடைசி டி20 போட்டி நடைபெற்றது .இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் 9 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |