Categories
உலக செய்திகள்

“கிம் ஜாங் உன் ஆட்சி”…. தூக்கிலிடப்பட்ட 23 நபர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

வடகொரியாவில் கிம் ஜாங் உன் ஆட்சியின் கீழ் குறைந்தது 23 பேர் தூக்கிலிடப்பட்டு உள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

தென் கொரியாவிலிருந்து K-pop வீடியோக்களைப் பார்த்து விநியோகம் செய்ததற்காக வட கொரியா தனது குடிமக்களில் குறைந்தது 7 நபர்களையாவது தூக்கிலிட்டுள்ளது என்று ஒரு மனித உரிமை அறிக்கை அதிர்ச்சியான தகவலை வெளியிட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் வட கொரியத் தலைவரான கிம் ஜாங் உன்னின் கீழ் இந்த மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாக Transitional Justice Working Group எனும் நீதிப் பணிக்குழு கண்டறிந்ததாக நியூயார்க் டைம்ஸின் அறிக்கை கூறுகிறது. Transitional Justice Working Group குழு 2015-ம் ஆண்டு முதல் வட கொரியாவிலிருந்து வெளியில் சென்ற 683 மக்களை நேர்காணல் செய்தது.

வடகொரியாவின் அரசு அனுமதித்த பொது மரணதண்டனைகள் என சொல்லப்படும் இந்த தூக்கு தண்டனைகள் குறித்தும், அந்த மக்கள் கொலை செய்யப்பட்ட மற்றும் புதைக்கப்பட்ட இடங்களை அடையாளம் காணவும் இந்த நேர்காணல் நடத்தப்பட்டது. அதன்படி K-pop வீடியோக்களைப் பார்த்ததற்காக கொலை செய்யப்பட்ட இந்த 7 நபர்களில், 6 பேர் 2012 மற்றும் 2014-க்கு இடையே Hyesan-ல் தூக்கிலடப்பட்டு உள்ளனர். மேலும் கிம்மின் கீழ் குறைந்தது 23 மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாக கண்டறிப்பட்டுள்ளது.

எனினும் உண்மையான எண்ணிக்கையைத் தீர்மானிப்பது மிகவும் கடினம் என்பதால் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த மரணதண்டனையின் போது குடும்பங்கள் தங்கள் அன்புக்கு உரியவர்களின் மரணத்தைப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாக அறிக்கை மேலும் வெளிப்படுத்தியது. 2011-ல் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து சர்வாதிகாரியான கிம் ஜாங் உன் அரசியல் மற்றும் இராஜதந்திர சூழ்ச்சிகளால் சூழப்பட்டு உள்ளார். தென் கொரிய பொழுதுபோக்கை வட கொரியர்கள் பார்த்தால், அது அவர்களின் மனதை கெடுக்கும் என்று அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுபோன்ற மரணதண்டனை சம்பவங்கள் தொடர்பாக தகவல் வெளிவருவது இது புதிதல்ல. கடந்த 2016-ஆம் ஆண்டு விசாரணையின்போது, தென் கொரியாவின் உளவு நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வுக்குழு கிம் ஆட்சியில் இருந்த முதல் 5வருடங்களில் அவர் சுமார் 340 பேரை தூக்கிலிட்டதாகக் கூறியது. இவற்றில் 2013-ல் அவரது மாமா ஜாங் சாங் தேக் படுகொலை செய்யப்பட்டது மற்றும் 2012-ல் இராணுவ தலைவரான ரி யோங் ஹோவின் கலையெடுப்பு போன்றவை அடங்கும். இவர்கள் இருவரும் கிம் ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்கு உதவியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |