துலாம் ராசி அன்பர்களே..!!!! சிலரது பேச்சு இன்று மனதில் சங்கடத்தை உருவாக்கி கொடுக்கும். காலத்தின் அருமையை உணர்ந்து இன்று பணியில் ஈடு படுவீர்கள். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். நிலுவைப்பணம் கூடுதல் முயற்சியால் வரவாகும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம். இன்று தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள்.உடன் பணிபுரியும் நபர்கள் மூலம் நன்மை ஏற்படும்.
இன்று பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும் அரசியல் துறையினர் புதிய முடிவுகளை எடுக்கக் கூடும் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். ஆன்மீக சுற்றுலாக்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகளும் இன்று கிடைக்கும். தெய்வத்திற்காக சிறு தொகையையும் இன்று நீங்கள் செலவிடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். நீங்கள் சொல்வதை மற்றவர்கள் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றார் போல் நடப்பது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து படியுங்கள். படித்த பாடத்தை எழுதி பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.