விருச்சிக ராசி அன்பர்களே…!! இன்று உங்களின் நல்ல செயலை நண்பர்கள் பாராட்டக் கூடும். தொழில் வியாபாரம் செழித்து வளர்வதற்கு தேவையான மாற்றங்களைச் செய்வீர்கள். லாபவிகிதம் அதிகரிக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகிச் செல்லும். இன்று பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்று எண்ணம் ஏற்பட்டு நீங்கும்.
வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு காணப்படும். கொடுக்கல்-வாங்கல் விஷயங்களிலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். வாக்குறுதிகள் யாருக்கும் இன்று கொடுக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது பொறுமையை மட்டும் கையாளுங்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன பொசல்கள் இருக்கும், பார்த்துக் கொள்ளுங்கள். பேசும்பொழுது நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.
இன்று மாணவ கண்மணிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இருந்தாலும் படித்த பாடத்தை நினைவில் வைத்துக் கொள்வதற்கு, ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.