Categories
உலக செய்திகள்

“ஜப்பானில் பயங்கரம்!”…. அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து….. மூச்சுத்திணறி பலியான மக்கள்…..!!

ஜப்பானில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு சுமார் 27 நபர்கள் மூச்சுத்திணறி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் இருக்கும் ஒசாக்கா மாகாணத்தின் கிஷிமோடோ என்னும் நகரத்தில், இருக்கும் 8 மாடிகள் உடைய அடுக்குமாடி கட்டிடத்தில், பள்ளி, மருத்துவமனை, வணிக வளாகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இக்கட்டிடத்தின், 4-ஆம் தளத்தில் இன்று காலையில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.

அதன்பின்பு, கட்டிடம் முழுக்க தீ பரவியதில் பலர் தீயில் மாட்டிக்கொண்டனர். அதன்பின்பு தீயணைப்புத்துறையினர், அங்கு சென்று தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர். இந்நிலையில் பற்றி எரிந்த தீயிலிருந்து வந்த புகையால் மூச்சுத் திணறி 27 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு அருகே இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |