லாஸ்லியாவை பார்க்க குவிந்த ரசிகர்களின் வீடியோ வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்” இந்த நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.
இதனையடுத்து, தற்போது இவர் ‘கூகுள் குட் டப்பா’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், லாஸ்லியா நிகழ்ச்சி ஒன்றுக்கு விருந்தினராக சென்றுள்ளார். அங்கு அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். மேலும், உற்சாகமடைந்து கத்த துவங்கிவிட்டனர். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
https://www.instagram.com/p/CXisUszoDD4/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again