ஹாலிவுட்டில் வசூல் மன்னன் எப்போதும் நான் தான் என்பதை இளைய தளபதி விஜய் நிரூபித்து காட்டியுள்ளார்.
2021-ஆம் ஆண்டு வெளியாகி அதிக வசூல் பெற்றுள்ள டாப் 5 படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் தளபதி விஜய்தான் முதல் இடத்தை பிடித்து உள்ளார். இது தொடர்பாக விரிவாக தெரிந்து கொள்வோம். அதாவது டாப் 5 படங்கள் பட்டியலில் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படம் முதல் இடம் பிடித்து உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மேனன் போன்ற பலர் நடிப்பில் வெளியான இந்த படம் சுமார் 250 கோடி ரூபாய் வசூல் செய்து முதல் இடத்தை பிடித்ததோடு எப்பவும் தளபதி தான் வசூல் கிங் என நிரூபித்து உள்ளது.
2-வதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான அண்ணாத்த படம் உள்ளது. இயக்குனர் சிவாவுடன் ரஜினி முதன் முறையாக கூட்டணி அமைத்த அண்ணாத்த படத்தில் ரஜினி தவிர நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் போன்ற பெரும்பாலான முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர். இந்த படமானது 150 கோடி ருபாய் வசூல் செய்து 2-வது இடத்தில் இருக்கிறது. அதன்பின் சிம்பு நடிப்பில் கடந்த மாதம் 25-ஆம் தேதி வெளியான மாநாடு படம் 3-வது இடத்தில் உள்ளது. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் டைம் லூப் பாணியில் உருவாகி இருந்த மாநாடு படம் சிம்புவிற்கு ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. மேலும் 101.55 கோடி ரூபாய் வசூல் செய்து 3-வது இடத்தை பிடித்து உள்ளது.
இந்த படங்களை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து 4-வது இடத்தை பிடித்துள்ளது. இதனைதொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் 70 கோடி வசூல் செய்து 5-வது இடத்திலும் உள்ளன.
இவ்வாறு ரஜினியை பின் தள்ளி அதிக வசூலில் விஜய் முதல் இடம் பிடித்து உள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது விஜய் நடிப்பில் தயாராகிவரும் பீஸ்ட் திரைப்படமும் இதைவிட அதிகமான வசூலை செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.