வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. வடகொரியாவை 1994 முதல் 2011 வரை கிம் ஜாங் இல் ஆட்சி செய்து வந்தார். இவர் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. கிம் ஜாங் இல்லின் 10-ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று முதல் அடுத்த 11 நாட்களுக்கு பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்கு வடகொரியா முழுவதும் தடை விதித்து ஆணை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது மளிகை கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கக் கூடாது, சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தக் கட்டுப்பாடுகள் ஆண்டுதோறும் அமல்படுத்த படுவதாகவும் அந்நாட்டு மக்கள் கூறுகின்றனர். மேலும் அரசின் உத்தரவை மீறி செயல்பட்டால் அவர்கள் குற்றவாளியாக கருதப்படுகின்றனர். மேலும் கைது செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் கிம் ஜாங் இல்லின் துக்க நிகழ்வு சரியாக அனுசரிக்கப்படுகிறதா? மக்கள் வருத்தப் படுத்தப்படுகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு தனியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வட கொரியாவில் பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் பெரிதும் தவித்து வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பசி பட்டினி வறுமையால் வாடி வரும் சூழலிலும், கூட அதிபர் கிம் ஜாங் இல்லின் கட்டுப்பாடுகள் மேலும் துயரத்தில் ஆழ்த்துவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.