Categories
அரசியல் தேசிய செய்திகள்

“பாலியல் வன்கொடுமை”…. இதெல்லாம் ஜாலி பண்ணுங்க…. எம்எல்ஏ-வின் சரமாரியான பேச்சு…..!!!!

பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க முடியாவிட்டால் அதை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ கர்நாடக சட்டசபையில் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநில சட்டமன்ற கூட்டத்தில் வேளாண் பயிர்கள் பாதிப்பு மற்றும் இழப்பீடு தொடர்பான விவாதம் டிசம்பர் 16 நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர் விமர்சனங்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்தது. இது தொடர்பாக விவாதம் செய்ய கேள்வி நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான ரமேஷ்,குமார், “பாலியல் வன்கொடுமையை எதிர்கொள்ளும்போது அதை தடுக்க முடியாவிட்டால் மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்கிற பழமொழி ஒன்று உள்ளது. இதே நிலையில்தான் நான் இருக்கிறேன்” என்று கூறி உள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏவின் பேச்சும், பாஜக சபாநாயகரின் வரவேற்பும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அதன்பின் எம்.எல்.ஏ. ரமேஷ் குமார் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதாவது “பாலியல் தொடர்பாக சட்டசபையில் நான் பேசிய கருத்து அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது நோக்கம் அதுவல்ல. இனிமேல் கவனத்துடன் இருப்பேன்” என்று அதில் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 2019-ஆம் வருடம் ரமேஷ் குமார் சபாநாயகராக இருந்தபோது, அவர் தன்னை பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிய ஒருவருடன் ஒப்பிட்டு பேசினார்.

Categories

Tech |