Categories
பல்சுவை

வெறும் 5 நிமிடம் போதும்…. ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வது இனி ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாக கருதபடுகிறது. இந்த ஆதார் அட்டை அனைத்து அரசு மற்றும் அரசு சாரா செயல்பாடுகளுக்கும் கேட்கப்படுகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இதனை நாம் சரியான முறையில் கையாள வேண்டும். பாதையிலுள்ள விவரங்கள் எதாவது தவறாக இருந்தால் அதனை உடனே திருத்தம் செய்து கொள்வது நல்லது. அவ்வாறு திருத்தங்கள் இருந்தால் அதனை நாம் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் அல்லது இ சேவை மையம் மூலமாக மாற்றம் செய்யலாம். இந்த வசதிகளை மக்களின் நலன் கருதி அரசு ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் ஆதாரில் முகவரியில் ஏதாவது தவறுகள் இருந்தால் அதனை மாற்றுவது அல்லது திருத்தம் செய்வதற்கான எளிய வழிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஆன்லைன் மூலம் ஆதாரில் முகவரி மாற்றம் & திருத்தம் செய்ய?

1. முதலில் https://ssup.uidai.gov.in/ssup/login.html என்ற ஆதார் சேவையின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2.  உங்களுடைய ஆதார் எண் மற்றும் Captcha குறியீடு கொடுக்க வேண்டும். உங்களது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP யை பதிவு செய்து உள்ளே செல்ல வேண்டும்.

3. பிறகும் தோன்றும் பக்கத்தில் Aadhaar Update என்பதை தேர்வு செய்து முகவரியை மாற்றி அல்லது திருத்தி அமைத்துக் கொள்ளலாம். இந்த செயலை மேற்கொள்வதற்கு ஆதார் தளத்தில் கூறப்பட்டுள்ள 45 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆதார் நிரந்தர பதிவு மையம் மூலம் மாற்றம் & திருத்தம் செய்வதற்கான வழிமுறை:

1. முதலில் உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஆதார் நிரந்தர பதிவு மையத்தை அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரியவில்லை என்றால் https://appointments.uidai.gov.in/easearch.aspx?AspxAutoDetectCookieSupport=1 என்ற இணையதளத்திற்கு சென்று உங்களது Pincode உள்ளிட்டு உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஆதார் நிரந்தர பதிவு மையத்தை தெரிந்து கொள்ளலாம்.

2. அந்த மையத்திற்கு நேரில் சென்று முகவரி மாற்றம் செய்வதற்கான படிவத்தை பூர்த்தி செய்து ஆதார் சேவை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள 45 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொடுத்து ஆதார் திருத்தம் அல்லது மாற்றம் செய்துகொள்ளலாம்.

Categories

Tech |