உத்திரபிரதேசத்தில் பள்ளிக்கு செல்லும் பெண்களுக்கு தொந்தரவு கொடுத்தவனுக்கு பெண் போலீசார் பாடம் புகட்டினார் .
உலகத்தில் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் நிலவிவரும் நிலையில் பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரில் பள்ளிக்கு செல்லும் மாணவிகளிடம் வழியில் நின்று கொண்டிருந்தவன் சில்மிஷம் செய்து தொந்தரவு கொடுத்துவந்துள்ளான். அப்போது அந்த வழியில் வந்த பெண் போலீசார் ஒருவர் தான் அணிந்திருந்த காலனியை கழட்டி அவனை சரமாரியாக தாக்கினார். இந்தக்காட்சிகள் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில் பலரது கவனத்தை பெற்றுள்ளது.