தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் குரூப் 1 முதல் 4 வரை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த தேர்வுகள் நடத்துவதற்கான கால அட்டவணை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு அதன் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும். இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அரசு தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை.
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் அரசு தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து குரூப்-2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும் மாதங்கள் குறித்த முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அறிவித்துள்ளார். அவ்வகையில் குரூப்-2 தேர்வு பிப்ரவரி மாதமும், குரூப் 4 தேர்வு மார்ச் மாதமும் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து குரூப்-2 உதவி இயக்குனர்-நகர வடிவமைப்பு பதவிக்கான தேர்வு அறிவிப்பை பிப்ரவரி மாதம் மற்றும் குரூப் 4, VAO தேர்வு மூலம் துறைவாரியாக சமூகப் பாதுகாப்புத் துறை, மீன்வளத்துறை, சிறைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை, மாநில நீதித்துறை மற்றும் சமூக நலத்துறை பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.