Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு….. டெல்லி அரசு அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்ததால் பள்ளி மாணவர்களுக்குஆன்லைன் மூலமாக  வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்றது. அந்த வகையில் டெல்லியில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் காற்று மாசுபாட்டின் காரணமாக பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பள்ளி கல்லூரிகளை அரசு திறந்தது. ஆனாலும் காற்று மாசுபாடு இன்னும் குறையாத சூழலிலும் பள்ளிகளை திறந்ததற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதனால் வழக்கம்போல ஒரு மாதமாக செயல்பட்டு வந்த பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியிருந்தது. இந்த நிலையில் டெல்லியில் பள்ளிகளுக்கு நாளை முதல் 6 முதல் 12 வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படுவதாக டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |