சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்கும் விதமாக அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் அசோக்பில்லர் பேருந்து நிறுத்தத்தில் சோதனையில் ஈடுபட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது என மாணவர்களுக்கு அறிவுரை கூறினர். இந்நிலையில் அவ்வழியாக வந்த பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்தபடி வந்த ஒரு மாணவன் அதிகாரிகளை பார்த்ததும் ஓடும் பஸ்ஸில் இருந்து இறங்கி அடித்துப் பிடித்து ஓடினார்.
Categories