நெல்லையில் அரசு உதவி பெரும் தனியார் பள்ளியின் கழிவறை கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது எட்டாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், விஸ்வரங்சன் உள்ளிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அங்குள்ள பள்ளி மாணவர்கள் இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களோடு போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானப்படுத்தினர். இந்நிலையில் உயிரிழந்த 3 மாணவர்களின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாணவர்களின் உடலை வாங்க மறுத்து விபத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.