Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியிடம் வீடியோ கால் பேசியபடி…. தூக்கில் தொங்கிய கணவர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

மனைவியிடம் வீடியோ காலில் பேசியபடியே கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் பகுதியில் எலக்ட்ரீசியனான பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சர்மிளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதுடைய மகன் இருக்கிறான். இந்நிலையில் வீட்டில் இருந்த பாபு வேலைக்கு சென்ற சர்மிளாவிற்கு வீடியோ கால் செய்துள்ளார். இதனையடுத்து வீடியோ காலில் பேசியபடியே பாபு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சர்மிளா உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பாபுவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |