Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவிக்கு தெரியாமல் திருமணம்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

மனைவிக்கு தெரியாமல் 2-வதாக திருமணம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள பொத்தூர் மணிகண்ட புரம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிறிய அளவிலான கம்பெனியை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர்.

இந்நிலையில் கீதாவிற்கு தெரியாமல் குமார் 2-வதாக உறவினர் ஒருவரின் மகளை திருமணம் செய்துள்ளார். தற்போது அந்தப் பெண் கர்ப்பமாக இருக்கிறார். இதுகுறித்து கேட்டபோது கீதாவிற்கும் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபம் அடைந்த குமார் கீதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து கீதா ஆவடி டேங்க் பேக்டரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமாரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

Categories

Tech |