இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (ஸ்டேட் வங்கி) தங்களது வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதாவது சேமிப்பு கணக்கு, டீமாட் கணக்கு, வர்த்தக கணக்கு ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து ஒரே கணக்காக எஸ்பிஐ அறிமுகப்படுத்தி உள்ளது
இதில் சேமிப்பு கணக்கு என்பது வங்கி சேமிப்புக்கான கணக்கு ஆகும். டீமாட் கணக்கு என்பது பங்குச் சந்தை முதலீடுகளுக்கான கணக்கு ஆகும். வர்த்தக கணக்கு என்பது வர்த்தகத்துக்கான கணக்கு ஆகும். தற்போதைய சூழலில் அனைவரும் தனித்தனியாக சேமிப்பு கணக்கு, டீமாட் கணக்கு, வர்த்தக கணக்கு போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே நீங்கள் ஒரே கணக்கில் வங்கி சேமிப்பு, முதலீடுகள் வர்த்தகம் போன்றவற்றை கவனித்துக் கொள்ளலாம்.