மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குரும்பபாளையம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டுள்ளார். இந்நிலையில் கோவை- சத்தி சாலையில் சென்று கொண்டிருந்த போது பிரகாஷின் மோட்டார் சைக்கிள் மீது தினேஷ்குமார் என்பவர் ஓட்டி வந்த லாரி பலமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.