Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட் : வலுவான நிலையில் ஆஸ்திரேலியா ….! 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 17/2….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில்  2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்  இழப்புக்கு  17 ரன்கள் குவித்துள்ளது.

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகள் இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது .இதனிடையே 2-வது டெஸ்ட் போட்டி  அடிலெய்டு ஓவல்  மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது .

இதைதொடர்ந்து 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது இதில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது . இதன் பிறகு இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இதில் தொடக்க வீரர்களாக ஹசீப் ஹமீத் – ரோரி பர்ன்ஸ் களமிறங்கினர். இதில் ஹசீப் ஹமீத்6  ரன்னும், ரோரி பர்ன்ஸ்ரன்4 ரன்னும்  எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியை விட இங்கிலாந்து 456 ரன்கள் பின்தங்கியுள்ளது.

Categories

Tech |