பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் – ரிஸ்வான் ஜோடி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனைப் படைத்துள்ளனர் .
பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்தது. இதில் 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது. இதில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இப்போட்டியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் 79 ரன்னும், முகமது ரிஸ்வான் 87 ரன்னும் எடுத்து அசத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 158 ரன்கள் குவித்தது. இதன் மூலம் தொடக்க வீரர்களான பாபர் அசாம் – ரிஸ்வான்ஜோடி இந்திய அணியின் ரோகித்- ராகுல் ஜோடியின் சாதனையை முறியடித்துள்ளது .
அதன்படி டி 20 தொடரில் அதிக முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியாக இந்திய அணியில் தொடக்க வீரர்களான ரோகித் – கே.எல்.ராகுல் இருந்தனர் . இதுவரை இருவரும் 5 முறை டி20 போட்டிகளில் 100- ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். தற்போது இந்த சாதனையை பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம்- முகமது ரிஸ்வான் ஜோடி முறியடித்துள்ளனர். இந்த ஜோடி 6 முறை டி20 போட்டியில் 100- ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிக முறை 100 ரன்கள் ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியாக சாதனை படைத்துள்ளனர்.