Categories
உலக செய்திகள்

என்னடா விளம்பரம் இது?… “சொந்த காசுல சூனியம் வச்சிட்டீங்களே”…. சர்ச்சையில் சிக்கிய பால் நிறுவனம்..!!!!

தென்கொரியாவை சேர்ந்த பிரபல பால் உற்பத்தி நிறுவனம் வெளியிட்ட விளம்பர வீடியோ ஒன்று உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவில் செயல்பட்டு வரும் பிரபல பால் உற்பத்தி நிறுவனமான “சியோல் மில்க்” சமீபத்தில் தனது பால் விற்பனையை அதிகரிக்கும் விதமாக விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவானது உலக அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது பெண்களை பசுமாடுகள் போல் சித்தரித்து “சியோல் மில்க்” நிறுவனம் விளம்பர வீடியோவை எடுத்துள்ளது. மேலும் அந்த நிறுவனம் வெளியிட்டிருந்த விளம்பர வீடியோவில், காட்டுப்பகுதியில் ஒரு நபர் கேமராவை எடுத்துச் செல்ல அங்கு சில பெண்கள் புல்வெளி நிறைந்த பகுதியில் வெள்ளை உடை அணிந்தபடி யோகா செய்வது போன்றும், ஓடையில் ஓடும் நீரை குடிப்பது போன்றும் செயல்களில் ஈடுபட்டிருந்தனர்.

அதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்த அந்த நபர் “இயற்கையில் இருந்து வரும் தூய்மையான நீரை அந்த பெண்கள் குடிக்கிறார்கள், இயற்கையான உணவுகளை சாப்பிடுவதோடு அமைதியான சூழலில் வசித்து வருகின்றனர். கவனமுடன் நான் அவர்களின் அருகில் செல்ல முயற்சி செய்கிறேன்” என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த நபர் கீழே கிடந்த மரத்துண்டுகளில் காலை வைக்கிறார். பின்னர் அந்த மரத்துண்டுகள் சற்றென்று உடையும்போது அந்த சத்தத்தை கேட்டு பசு மாடுகளாக அந்த பெண்கள் மாறுகின்றனர்.

அதன் பிறகு “சியோல் பால்” 100 சதவீதம் ஆரோக்கியமான உணவு மற்றும் தூய்மையான நீர் கொண்டது. இயற்கையான பால் இயற்கையான சூழ்நிலைகளில் இருந்து கிடைக்கிறது என்று கூறுவதோடு அந்த விளம்பரம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து “சியோல் பால்” நிறுவனம் பசுக்கள் போல் பெண்களை சித்தரித்து காட்சி பொருளாக்கி விளம்பரம் செய்து வருவதாக உலக நாடுகள் கடும் கண்டனத்தை முன்வைத்தது.

அதோடு மட்டுமில்லாமல் தென்கொரியாவில் சியோல் பால் நிறுவனத்தை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்று எதிர்ப்புகள் எழுந்தது. இதன் காரணமாக அந்த பால் நிறுவனத்தின் விற்பனையும் வெகுவாக சரிந்தது. மேலும் உலக அளவில் சர்ச்சை எழுந்ததையடுத்து “சியோல் பால்” நிறுவனம் பெண்களை பசுக்கள் போல் சித்தரித்ததற்காக மன்னிப்பு கோரியுள்ளது. இந்த விளம்பரம் விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று “சியோல் பால்” நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |