Categories
வானிலை

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு….!!!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் மாவட்டமான தூத்துக்குடி. ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில். மழை கொட்டி தீர்த்தது.இதேபோன்று செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், திருவாரூர் ,தஞ்சை, நாகபபட்டினம், சென்னை, திருவள்ளூர் ஆகிய காவிரி டெல்டா மற்றும் கடலை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கன மழைபெய்தது. இதேபோலவே கோவை, திருப்பூர்,ஈரோடு, நீலகிரி, சேலம் உள்ளிட்ட கொங்கு மாவட்டத்திலும் தீவிர மழை பெய்தது வருகிறன்து.

இந்நிலையில், இலங்கையின் தென்கிழக்கே தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து வந்த வளிமண்டல சுழற்சி, தற்போது மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் நிலவி வருவதால் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தென்கிழக்கே தென்மேற்கு வங்க கடலில் வளி மண்டல சுழற்சி நிலை கொண்டுள்ளதன் காரணத்தால் தமிழகத்தின் கடலோர பகுதி மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |