சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கூலித்தொழிலாளி மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி பகுதியில் உள்ள மேற்கு தெருவில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு வயல்பட்டியில் இருந்து கொடுவிலார்பட்டிக்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபம் அருகே சென்ற போது எதிரே வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென நிலை தடுமாறி முருகன் மீது மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து முருகன் மகன் வினோத்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்து முருகன் மீது மோதிய இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த வீரபாண்டியை சேர்ந்த பாலாஜி என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.