பரினாவின் மகனுக்கு பெயர் சூட்டும் விழா கோலாகலமாக நடந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல் ”பாரதி கண்ணம்மா”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் டி.ஆர்.பி.யிலும் முன்னிலை வகித்து வருகிறது. சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து ரோஷ்னி ஹரிப்ரியன் சில காரணங்களால் விலகினார்.
இதனையடுத்து, இந்த சீரியலில் வெண்பா என்னும் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர் பரினா. சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், இவரின் மகனுக்கு பெயர் சூட்டும் விழா கோலாகலமாக நடந்து உள்ளது. இந்த விழாவில் பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலங்கள் மற்றும் பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் அர்ஜுனனும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.