வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதிலும் வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வங்கி ஊழியர்கள் அனைவரும் இந்த போராட்டதில் பங்கேற்றுள்ளனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 78 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஊழியர்கள் 380க்கும் மேற்பட்டோர் வங்கியை புறகணித்துவிட்டு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் மூடப்பட்டதால் வங்கிக்கு சென்ற வாடிக்கையாளர்கள் மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பணபரிவர்த்தனை செய்யமுடியாமலும், காசோலை பதிவும் நடக்காமல் மிகவும் அவதியடைந்துள்ளனர். இதனையடுத்து ஏ.டி.எம்-இல் பணம் நிரப்பும் பணிகளும் பாதிப்படைந்ததால் அங்கும் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.