தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 5 அடி ஆழத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைவாக செயல்பட்டு பள்ளம் ஏற்பட்ட இடத்தில் பேரிகார்டு அமைத்துள்ளனர்.
இதனையடுத்து பள்ளம் ஏற்பட்ட இடத்தில் பெரிய கிணறு ஒன்று இருந்ததாகவும், சமீபத்தில் ஏற்பட்ட கனமழையால் நீர் மட்டம் உயர்ந்ததால் பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் பாலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.