பூடானின் 114 ஆவது தேசிய நாளான இன்று அந்நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதை இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடிக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூடான் நாட்டில் இன்று 114 ஆவது தேசிய நாள் கொண்டாடப்படவுள்ளது. இந்த தேசிய நாளின்போது பல துறைகளில் உள்ளவர்களுக்கு விருதுகள் கொடுக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடிக்கு பூடானின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான “நகடக் பெல் ஜி கோர்லோ” வழங்கப்படவுள்ளது. இந்த தகவலை பூடான் நாட்டின் பிரதமரான லோடே ஷேரிங் தன்னுடைய இணையத்தளமான பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.