Categories
உலக செய்திகள்

“கொரோனாவால் அதிகம் பாதித்த நாடு இது தான்”…. இதுவரை 5.7 கோடி மக்களுக்கு “பூஸ்டர்” தடுப்பூசி…..!!!!

கொரோனாவால் அதிக இழப்புகளை சந்தித்த அமெரிக்காவில் இதுவரை மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 5.71 கோடி மக்கள் போட்டு கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது. மேலும் அமெரிக்கா நாடு தான் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் சந்தித்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு கொரோனா பரவலை கட்டுபடுத்தும் வகையில் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன், பைசர் /பையோஎன்டெக், மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

மேலும் அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் இதுவரை அமெரிக்காவில் பொதுமக்களுக்கு மொத்தம் 49,00,30,849 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. அதில் முதல் டோஸ் தடுப்பூசியை இதுவரை 24,03,21,022 பேர் போட்டு கொண்டுள்ளதாகவும், தடுப்பூசியின் 2-வது டோஸை 20,31,59,327 பேர் போட்டு கொண்டுள்ளதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் மாடர்னா, பைசர் உள்ளிட்ட நிறுவனங்களின் மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இதுவரை சுமார் 5.71 கோடி பேர் போட்டு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |