ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் பரவல் எதிரொலியாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் ஒமிக்ரான் வைரசால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. மேலும் ஒமிக்ரான் பாதிப்பு இங்கிலாந்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. இங்கிலாந்தில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் முழுமையான தடுப்பூசி போட்டிருந்தாலும், தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும் கொரோனா 3-ஆவது அலை அந்நாட்டில் வேகமெடுத்து பரவி வருகிறது. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் பரவல் எதிரொலியாக கட்டுபாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கனடா, பிரான்ஸ், சுவீடன், அயர்லாந்து, இங்கிலாந்து, போர்ச்சுக்கல், இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் மற்ற நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த நாடுகளுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு கனடாவில் வெளிநாட்டு பயணத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் விமான நிலையங்களில் காத்திருக்கும் வெளிநாட்டு பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு தடை விதித்துள்ளது.