Categories
உலக செய்திகள்

இந்தியாவை குறி வச்சு தாக்குறாங்க…! எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டீங்களா?… பாகிஸ்தானை சாடிய அமெரிக்கா….!!!!

இந்தியாவை குறிவைத்து தாக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அமெரிக்கா சாடியுள்ளது.

நம் தேசத்திற்குள் எந்த காரணமும் இல்லாமல் நுழையும் தீவிரவாத குழுக்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் அமெரிக்க அரசு வெளியிட்ட தீவிரவாதம் குறித்த ஆண்டறிக்கையில் லஷ்கர் இ தொய்பா ஜெய்ஷே முகமது உட்பட இந்தியாவை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பல தீவிரவாத இயக்கங்கள் பாகிஸ்தான் நாட்டில் தான் செயல்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பாகிஸ்தான் அரசு ஆப்கானிஸ்தான் நாட்டில் நடக்கும் தலிபான்களின் வன்முறைகளை குறைப்பதற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பினை வழங்கியுள்ளது. இருப்பினும் உரிய நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ளாததால் தொடர்ந்து பொருளாதார கண்காணிப்பு குழுவின் கிரே பட்டியலில் நீடித்து வருவதாக அந்த தீவிரவாதம் குறித்த ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேசமயம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் தீரத்துடன் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |