கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். எனவே இங்கு இருக்கும் , கடற்கரை, நீர்வீழ்ச்சி, பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு 3 நாட்கள் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு டிசம்பர் 31-ஆம் தேதி முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.