தொழிலாளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி பகுதியில் 15 வயதுடைய சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமியை காணவில்லை என அவரது தாய் கடந்த 11-ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சரவணம்பட்டி யமுனா நகர் பகுதியில் இருக்கும் குப்பை மேட்டில் கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் கிடந்த சிறுமியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவி கடைசியாக யாரிடம் பேசினார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான முத்துக்குமார் என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது கடந்த 3 ஆண்டுகளாக முத்துக்குமாருக்கும, மாணவியின் தாயாருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் மாணவியின் தாயாரிடம் இருந்து 2 1/2 பவுன் தங்க நகையை முத்துக்குமார் வாங்கி விற்று செலவு செய்துள்ளார். அந்த நகையை மாணவியின் தாயார் தொடர்ந்து கேட்டதால் அச்சமடைந்த முத்துக்குமார் மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நகையை திருப்பி தந்துவிட்டதாக உனது தாயிடம் பொய் சொல்லி விடு. நான் நாளை காலை அந்த நகையை திரும்ப தந்து விடுகிறேன் என முத்துக்குமார் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து மாணவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட முத்துக்குமார் தனது வீட்டிற்கு வந்து நகையை வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய மாணவி முத்துக்குமாரின் வீட்டிற்கு சென்று நகையை தருமாறு கேட்டபோது அவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அலறிய மாணவியின் வாயில் துணியை வைத்து அழுத்தி தாக்கி முத்துக்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் மாணவியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி முத்துக்குமார் அவரை கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி குப்பைமேட்டில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.