Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்த 3 பேருல பெஸ்ட் விக்கெட் கீப்பர் இவர்தான் …! காரணத்துடன் கூறிய அஸ்வின்….!!!

ஸ்பின்னருக்கு எதிராக சிறப்பாக செயல்படக் கூடிய விக்கெட் கீப்பர் தோனிதான் என  அஸ்வின் தெரிவித்துள்ளார் .

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கிட்டத்தட்ட 11 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் .இந்நிலையில் சமீபத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசி சாதனை படைத்தார். இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில் அவருடைய அனுபவத்தில் இந்திய அணியில் சிறந்த விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்விக்கு அஸ்வின் பதிலளித்துள்ளார் .

குறிப்பாக ஸ்பின்னருக்கு எதிராக அணியில் சிறப்பாக செயல்படும் விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அஸ்வின் கூறும்போது ,”இந்திய அணி விக்கெட் கீப்பர்கள் அனைவருமே ஸ்பின்னருக்கு எதிராக சிறப்பாக செயல்படக் கூடியவர்கள் .அணியில் குறிப்பாக தினேஷ் கார்த்திக் , விருத்திமான் சாஹா ,தோனி ஆகிய மூவரும் ஸ்பின்னருக்கு எதிராக சிறப்பான விக்கெட் கீப்பிங் செய்தவர்கள். இதில் ஒருவரை தேர்வு செய்வது கடினம் தான். ஆனால் என்னை பொறுத்தவரை இந்த மூன்று பேரில் தோனி தான் சிறந்த விக்கெட் கீப்பர். இதற்கு முன்பாக தமிழக கிரிக்கெட் அணியில் நான் தினேஷ் கார்த்திக் உடன் விளையாடி உள்ளேன்.

ஆனால் தினேஷ் கார்த்திக்கை விட தோனி சிறந்தவர் எனக் கூறுவேன் . ஒருமுறை சென்னை டெஸ்ட் போட்டியின் போது கோவன்ஸ் விக்கெட்டை கைப்பற்றியதே தோனியின் வேகத்துக்கு சான்று . அவர் அசாத்தியமான அந்த பவுன்சரை எளிதில் பிடித்து ஸ்டம்பிங் செய்தார். இதேபோல் கடினமான நேரத்தில் தோனி சிறப்பான விக்கெட் கீப்பிங்கை  வெளிப்படுத்தியுள்ளார். இதனால் இந்த 3  பேரில் தோனிதான் சிறந்த விக்கெட் கீப்பர் என கூறுவேன் “இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |