Categories
மாநில செய்திகள்

BRAEKING : ‘இன்னுயிர் காப்போம்’ திட்டம்…. துவங்கி வைத்தார் முதல்வர்…!!!!

இன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தை பற்றி அவர் பேசியதாவது: “பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை வாங்கி கொடுக்கின்றனர். ஆனால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியம். அனைவரும் சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இதில் தான் சமூக பண்பாடு, தனிமனித ஒழுக்கம் இருக்கின்றது.

மேலும் விபத்து ஏற்பட்டு முதல் 48 மணி நேரத்திற்கு உயிர் காக்கும் சிகிச்சை செலவை அரசே ஏற்கும். தமிழகத்தை சேர்ந்தவர்கள், வெளிமாநிலத்தவர்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைவருக்கும் இந்த சிகிச்சை அளிக்கப்படும். சாலை விபத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அவசர சிகிச்சைக்கான செலவை தமிழக அரசு ஏற்கும். இதற்காக 609 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளது. 12 மாதத்திற்குள் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார் .

Categories

Tech |