திமுக அரசு தேர்தல் நேரத்தில் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியும், பல கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்று கூறி அதிமுக சார்பில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் சேலத்தில் இபிஎஸ் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறி ஈபிஎஸ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்துக்கு இடையூறு, தொற்றுநோய் பரவ காரணம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் இபிஎஸ் மற்றும் அந்த போராட்டங்களில் பங்கேற்ற எம்பி, எம்எல்ஏக்கள், தொண்டர்கள் உள்ளிட்ட 67000 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாலகங்கா உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.