Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடைபயிற்சிக்கு சென்ற மூதாட்டி…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை….!!

மூதாட்டியிடம் இருந்து நகை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள நங்கநல்லூர் பகுதியில் ஆறுமுகம்-தமிழரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழரசி நங்கநல்லூர் 28-வது தெருவில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் தமிழரசியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதுகுறித்து தமிழரசி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |