நண்பரை வடமாநில தொழிலாளி குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உத்தனப்பள்ளி பகுதியில் இருக்கும் கல்குவாரியில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சம்புநந்தி, சிவநாத் என்ற நண்பர்கள் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மது போதையில் தள்ளாடியபடி வந்த சிவநாத் சம்புநந்தி சாப்பிட்டுக்கொண்டிருந்த தட்டில் கால் வைத்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த சம்புநந்தி கத்தியால் சிவநாத்தை சரமாரியாக குத்தியுள்ளார்.
அதன்பின் படுகாயம் அடைந்த சிவநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவநாத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.