Categories
மாநில செய்திகள்

உயிர் பலி வாங்க காத்திருந்த 300 பள்ளிகள்….!! காவு கொடுத்த பின் தான் கண்டுகொள்ளுமா அரசு….??

தமிழகம் முழுவதும் உறுதித் தன்மை இல்லாத சுமார் 300 பள்ளிக் கட்டிடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

உயிர்பலி நடந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவது அரசின் வாடிக்கையாகவே உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 சிறுவர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் சுமார் 200 பள்ளிகள் உறுதி தன்மை அற்றது என கூறி அதை ஆட்சியர்கள் இடிக்கும் படி உத்தரவிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து புதுக்கோட்டையில் சுமார் 100 பள்ளிகள் வரை இடிக்கப்பட உள்ளன. நெல்லை மாவட்டத்தில் நடந்த இந்த பெரும் சோக சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நேற்று கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளின் கட்டிடங்களின் உறுதி தன்மையையும் ஆராய ஒரு குழுவை அமைத்துள்ளதாக கூறினார். இந்த உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முதன்மை கல்வி அதிகாரி மற்றும் பிற அதிகாரிகள் சேர்ந்து பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து உறுதியற்ற பள்ளிக் கட்டிடங்களை இடிக்கவும் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டையில் முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி சுமார் 1500 பள்ளிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இந்த பள்ளிகளில் சுவர்கள் மற்றும் தரை தளம் சிதைந்து காணப்பட்டது. இவ்வாறான பள்ளிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக சுமார் 100 பள்ளிகளை இடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் சுமார் 200 பள்ளிகள் வரை உடனடியாக இடிக்கப்பட வேண்டிய பள்ளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். அதாவது சுமார் 300 பள்ளிகள் இதுவரை கண்டு கொள்ளப்படாமல் இருந்து வந்துள்ளது. தற்போது நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த 300 பள்ளிகளும் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய பள்ளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு விஷயமாகும்.

Categories

Tech |