‘குக் வித் கோமாளி’ சீசன் 3 இன் படப்பிடிப்பு தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்தவகையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக ரசிகர்கள் மத்தியில் ஓடியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானார்கள்.
இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியின் 3 வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்களிடம் பெரிய கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக அசத்தலான தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதில் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள் என்ற விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.