பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தங்களது சமூக வலைதளங்களை பயன்படுத்தி உளவு பார்க்கும் பணியில் ஈடுபட்ட 6 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளது. இஸ்ரேல், இந்தியா, வடக்கு மாசிடோனியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 6 நிறுவனங்கள் 100-க்கும் அதிகமான நாடுகளில் வாழும் 100-க்கும் மேற்பட்டோரை உளவு பார்த்தது தெரியவந்துள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.
இந்த நிறுவனங்களுக்கு தொடர்புடைய உள்கட்டமைப்புகள் முடக்கப்பட்டு உளவு பார்ப்பதை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.மேலும் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள அந்நிறுவனங்களின் 1500-க்கும் மேற்பட்ட கணக்குகளும் தடை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இந்த கணக்குகளை வைத்து தான் ரகசியமாக உளவு பார்ப்பது, மக்களின் தனிப்பட்ட தகவல்களை தந்திரமாக திருடுவது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் அந்த நிறுவனம் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.