தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. செயலாளரான ஆர்.டி. ராஜேந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையம் அருகிலிருக்கும் காந்தி சிலை முன்பு தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க. செயலாளரான ஆர்.டி. ராஜேந்திரன் தலைமையிலும், எம்.எல்.ஏ. இளம்பை தமிழ்ச்செல்வன் முன்னிலையிலும் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க-வினர் பெட்ரோல்-டீசல் மீதான மாநில அரசு வரிகளை உடனடியாக குறைப்பதோடு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்க வேண்டுமென கோஷம் எழுப்பினர்.
மேலும் பொங்கல் விழாவை கொண்டாட உதவும் வகையில் அனைவருக்கும் பரிசு தொகை வழங்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தியும், அம்மா மினி கிளினிக்குகளை தி.மு.க. அரசு மூடுவதை கண்டித்தும், அரசின் அலட்சியத்தால் கடுமையாக உயர்ந்திருக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை எதிர்த்தும் பல்வேறு கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இதில் தி.மு.க. வேம்பூர் தெற்கு ஒன்றிய செயலாளரான கிருஷ்ணசாமி உள்ளிட்ட நகர, பேரூராட்சி, ஒன்றிய, மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.