Categories
பல்சுவை

பிஎஃப் கணக்கை இனி ஈஸியா மாற்றலாம்…. அதுவும் வீட்டிலிருந்தே ஐந்தே நிமிடத்தில்…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்துவிட்டு அங்கிருந்து விலகி மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் போது அவர்களுடைய பிஎஃப் கணக்கை அப்படியே விட்டுவிடுவார்கள். அதிலுள்ள படமும் அப்படியே முடங்கிவிடும். சிலருக்கு அந்த படம் இருப்பதே மறந்து விடும். சில காலம் கழித்து அதை நினைவுக்கு வரும் போது இவ்வளவு பணத்தை விட்டு விட்டோமே என்று அதிர்ச்சி அடைவார்கள். பிறகு உடனடியாக பிஎஃப் அலுவலகத்திற்குச் சென்றால் தான் பணம் கிடைக்கும் என்று நினைத்து நாள்கணக்கில் அங்கு அலைய வேண்டிய அவசியம் இருக்கும் என்று கவலைப்படுவார்கள்.

ஆனால் தற்போது எல்லாமே எளிதாகிவிட்டது. பிஎஃப் தொடர்பான அனைத்து சேவைகளையும் நீங்கள் ஆன்லைன் மூலமாகவே செய்ய முடியும். எங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே ஸ்மார்ட் போன் மூலமாக வேலையை எளிதில் செய்து முடித்துவிடலாம். பிஎஃப் கணக்கை புதிய நிறுவனத்திற்கு…

பிஎஃப் அமைப்பின் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற வெப்சைட்டில் செல்ல வேண்டும்.

உங்களுடைய பிஎஃப் நம்பர் (UAN), பாஸ்வர்டு, கேப்ட்சா குறியீடு கொடுத்து உள்நுழைய வேண்டும்.

அதில் மெயின் பேஜ் ஓப்பன் ஆகும். அதில் members profile திறக்க வேண்டும். அதில் உங்களுடைய பெயர், பிஎஃப் நம்பர், பான் கார்டு போன்ற விவரங்களை சரிபார்க்க வேண்டும்.

உங்களுடைய மொபைல் நம்பர், ஈமெயில் ஐடி, பாஸ்புக் போன்றவையும் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

அடுத்து  view என்ற வசதியில் passbook என்பதை select செய்ய வேண்டும்.

அதன் பிறகு மீண்டும் ஒரு முறை நீங்கள் லாகின் செய்ய வேண்டியிருக்கும். இப்போது வரும் புதிய பக்கத்தில் நீங்கள் வேலை பார்த்த நிறுவனம், பிஎஃப் பேலன்ஸ், தற்போதைய நிறுவனம் தொடர்பான விவரங்கள் அனைத்தும் வரும்.

நீங்கள் இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் நீங்கள் இணைந்த தேதி, விலகிய தேதி ஆகிய விவரங்கள் அதில் சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

அவ்வாறு அப்டேட் செய்யப்படாமல் இருந்தால் நீங்களே அதை அப்டேட் செய்ய வேண்டும்.

அடுத்ததாக, online services என்ற வசதியில் சென்று ONE MEMBER ONE EPF ACCOUNT என்பதை கிளிக் செய்யவும்.

அதில் பிஎஃப் தொடர்பான அனைத்து விவரங்களும் வரும். நீங்கள் பிஎஃப் கணக்கை மாற்றுவதற்கான கோரிக்கையை சம்பந்தப்பட்ட நிறுவனம் ஏற்க வேண்டும்.

கடைசியாக நீங்கள் ஓடிபி சரிபார்ப்புக்கு உட்பட வேண்டியிருக்கும். உங்களுடைய கோரிக்கை ஏற்கப்பட்டால் அதற்கான தகவல் வரும்.

கோரிக்கை ஏற்றவுடன் 7 முதல் 30 நாட்களுக்குள் பிஎஃப் பணம் புதிய கணக்குக்கு மாறிவிடும்.

Categories

Tech |