Categories
பல்சுவை

நம் மொபைல் நம்பரில் 10-digit இருக்க என்ன காரணம்?…. இதோ முழு விளக்கம்….!!!!

நம் அனைவரிடமும் மொபைல் போன் இருக்கும். கட்டாயம் அனைவரும் ஒரு சிம் கார்டு பயன்படுத்திக் கொண்டிருப்போம். சிலர் மூன்று சிம்கார்டு கூட வைத்திருப்பார்கள். நாம் வைத்திருக்கும் மொபைல் நம்பரில் 10 இலக்கங்கள் தான் இருக்கும். அது ஏன் தெரியுமா?

இந்தியாவில் மொபைல் எண் 10 இலக்கங்களை மட்டுமே கொண்டிருக்கும். அதில் ஒரு எண் அதிகமாகவோ ஒரு எண் குறைவாகவோ இருக்காது. சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளில் மொபைல் எண் 11 இலக்கங்களில் உள்ளது. ஏன் இந்தியாவில் மட்டும் இந்த வித்தியாசம்?

மொபைல் எண்ணில் உள்ள அனைத்து இலக்கங்களுக்கும் பல்வேறு அர்த்தமும் காரணமும் உள்ளது. அதனைப் போலவே ஒரே மொபைல் நம்பர் பல்வேறு நபர்களுக்கு வழங்கப்படாது. இந்தியாவில் உள்ள அனைவருக்குமே ஒரே மொபைல் நம்பர் தான்.

மொபைல் நம்பரில் உள்ள 10 இலக்கங்களில் மொத்தம் மூன்று பிரிவுகள் உள்ளது. முதல் இரண்டு இலக்கங்கள் “Access Code”(AC), அடுத்து வரும் மூன்று இலக்கங்கள் provider code (pc), கடைசி ஐந்து இலக்கங்கள் subscribers code(SC). இதற்கான காரணம் என்ன தெரியுமா?

மொபைல் நம்பர் 10 இலக்கமாக இருப்பதற்கான காரணம் மக்கள் தொகை பெருக்கம் மட்டுமே.பத்து இலக்கங்கள் இருப்பதால் சுமார் ஆயிரம்கோடி தனித்துவமான மொபைலின் களை உருவாக்க முடியும். இது நம் நாட்டின் 136 பில்லியன் மக்களுக்குப் போதுமானதாக இருக்கும். தற்போது நாட்டில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் கடந்த சில ஆண்டுகளாக புதிய மொபைல் எண் உருவாக்கப்படுகிறது. எனவே விரைவில் 11 இலக்கம் மற்றும் 12 இலக்கங்களில் கூட மொபைல் நம்பர் வருவதற்கு வாய்ப்புள்ளது.

சீன நாட்டில் மொபைல் நம்பர்கள் 11 இலக்கங்களை கொண்டிருக்கும். மொபைல் எண்ணுக்கு முன்பு கூடுதல் நகர குறியீடு ஜீரோ சேர்த்து டயல் செய்ய வேண்டும். இது நாட்டின் குறியீட்டில் இருந்து வேறுபட்டது. சீனாவை போலவே இங்கிலாந்திலும் 11 இலக்க மொபைல் நம்பர் உள்ளது.

Categories

Tech |