Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கன்னத்தை தொட்டு பேசிய ஆசிரியர்…. மாணவிகள் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள கீழ் கோத்தகிரியில் அரசு பள்ளி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் வரலாற்று ஆசிரியராக முரளிதரன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முரளிதரன் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியும், கண்ணத்தை தொட்டும் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து 12 மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து பள்ளி தலைமையாசிரியர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் முரளிதரன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானது. அதன்பின் காவல்துறையினர் முரளிதரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |