Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிந்தலவாடி பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அரவிந்தன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அரவிந்தன் மன உளைச்சலில் இருந்த அரவிந்தன் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.

இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அரவிந்தனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அரவிந்தன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |